சுடச்சுட

  

  நிலாவைத் தூது அனுப்பியவர்கள.
  நம் முன்னோர்கள்.
  புறாக்களும் போனதாக
  புராணங்கள் சாட்சியாக உள்ளன.
  தோழி தோழரைத்
  தூது அனுப்பியவர்களும் உண்டு.
  காலம் கடந்த தால்
  தபால் கார ர் மூலம்
  தூது சென்றன
  கடிதங்கள் .
  தொழில் நுட்ப முன்னேற்றத்தைத்
  தொடர்ந்து
  தொலைபேசிகளும்
  துணை நின்றன.
  அலைபேசிகளும்
  ஆதரவளித்தன.
  எஸ். எம்.எஸ்.கள் தூதாயின.
  வாட்ஸ்அப்களும்
  வழியமைத்துத் தந்தன.
  நிலாவை மக்கள்
  மறந்த போதும்
  நிலா
  நேசிக்காமல் இல்லை.
  இன்றும் இருக்கிறது நிலா.
  தூது அனுப்ப மக்கள்
  தயாராக இல்லை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai