சுடச்சுட

  

  உயர இருக்கும் நிலவே நீ
  ஓடிப் போய்
  அவளிடம் சொல்லு!

  இருக்கிறது தமிழ் நாடு இன்று
  இழிவான நிலையில் என்று!
  இந்த நிலை மாறினால் ஒழிய
  இல்லை  எம்   சந்திப்பென்று!

  கொத்துக் கொத்தாய் நெல்மணியை
  குவித்து வைத்து பசி தீர்த்த
  விவசாயி நாளும் இங்கு
  வீழுகின்றார் கொத்துக் கொத்தாய்!

  அவரைக் காக்க வேண்டிய அரசியலாரோ
  கூவத்தூரில் கும்மாளம் போட்டு
  குடி கூத்தில் குளிக்கின்றாரே!

  கோடியாய்ப் பணமாம் மேலும்
  கொடுத்தனராம் தங்க பிஸ்கட்!
  அமைச்சர் பதவியும் உண்டென்று
  அனைவருக்கும் உறுதி மொழியாம்!

  தாங்குமா தமிழ்நாடு இந்தத் 
  தறிகெட்ட கூட்டத் தாரை?!

  பாங்குடன் எடுத்துச் சொன்னால்
  ஏற்குமா இந்தக் கூட்டம்!?

  ஒன்றரைக் கோடி மக்களிங்கு 
  ஒன்றாய் அவர்கள் பக்கமென்று
  மார்தட்டும் மாஃபியா கூட்டம்
  மனதில் நன்றாய் இறுத்த வேண்டும்
  ஏழரைக் கோடியுமே எதிர்ப்பேயென்று!

  காதலிக்க    இது    ஒன்றும்
  கனிவான தருண மல்ல!

  எந்தன் இன்னுயிர் நிலவே நீ
  எம் காதலியைத் தேடாதே!
  மாறாக இந்த மண்ணிலுள்ள 
  மாந்தர் அனைவரின் மனதிற்குள்ளும் நீ போய்
  ஏடாகூட ஆட்சியை எடுத்தெறிய
  வழி செய்தால் எல்லா வரலாறும்
  நாயகியாய் உன்னை நவீன உலகினிலே

  பாட்டில் வடிக்கும் பின் 
  பாராட்டிப் பரிசு தரும்!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai