சுடச்சுட

  

  நிலவே  நீ   வருவாயா   எம்
  நெஞ்சக் கிடக்கையை சொல்வாயா?!
  மதியே நீ விரைவாயா  எம்
  மனக் குமுறலை உரைப்பாயா?!
  அம்புலியே நீ ஓடுவாயா எம்
  ஆதங்கத்தை எடுத்துக் கூறுவாயா?
  பிறையே நீ பறப்பாயா எம்
  பின்னணி பற்றிப் பேசுவாயா?!
  திங்களே நீ  நடப்பாயா இங்குள்ள
  தெகிடு த த்தம் குறித்துக்  கழறுவாயா?!

  உண்மை நேர்மை உழைப்பினை
  உண்மையாகவே நீ மதித்திட்டால்
  நாட்டில்  நடக்கும்  அவலங்களை
  நல்லோர்க்கு  நேரும்  தீங்குகளை
  இறைவன்    காதில்    எடுத்தோது!
  அவன் ஏதாவது செய்திட வழிதேடு!
  நேர்மையாளர்களை  வாழ  வைக்க
  நிச்சயம்    அவனும்  விரும்பிடுவான்!
  பணத்துக்காக       நிறம்       மாறும்
  பச்சோந்திகளை அவன் தண்டிப்பான்!

  ஆற்று      மணலை    அள்ளியெடுத்து
  அற்புதமாய்க்    காசு     பார்க்கும்
  வீணர்களை     வீழ்த்தி     அவனும்
  வேளாண்மையைக் காப்பாற்றி டுவான்!

  சோரம் போகும் அரசியல்வாதியைச்
  சொடுக்கி    அவனும்     கண்டிப்பான்!
  மதுவைக் குடித்து மனைவி மக்களை
  நட்டாற்றில் விடும் நயவஞ்சகர்களை 
  மிதித்தே      அவனும்     தண்டிப்பான்
  மிகுதியும்      அவரை     வஞ்சிப்பான்!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai