சுடச்சுட

  

  என் மனம் முழுவதும்
  என்னவள் நிறைந்திருப்பதை
  என்னவளிடம் கூறிவிடு முழுநிலவே.,
  என்னவள் எனைப்பிரிந்ததை எண்ணி
  என் உடல் வற்றியதை
  என்னவளிடம் கூறிவிடு பிறைநிலவே.,
  என்னவள் எனை சேரத்தவறினால்
  உன்னைப்போல் இல்லாதுபோவேன்
  என்று கூறிவிடு மறைநிலவே.,
  என்செய்தி தாங்கி நீ தூது போனால்
  உன்னையும் காதலில் ஆழ்த்தி
  கண்ணீர் சிந்தச்செய்து அவளது
  கால்தடம் பற்றச்செய்வாள்
  கதிரவனின் காதல் நிலவே.,                       

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai