Enable Javscript for better performance
வானவேடிக்கை: சீர்காழி.ஆர் .சீதாராமன்- Dinamani

சுடச்சுட

    

    இருக்கும் இடத்தை விட்டு
    இல்லாத இடம் மீது ஈர்ப்பு
    உள்ளதே மனிதனின் இயல்பு
    வானவேடிக்கை அதில் ஒன்று

    வானத்தின் முதல் வேடிக்கை
    என்றும் ஜொலிக்கும் மத்தாப்பூ
    நட்சத்திரங்கள் மின்மினிப்
    பூச்சிகள் அழகு வானவில்

    வானத்தில் மிதக்கும் விமானம்
    பறவைகள் நிலா  மின்னல்
    வெட்டு இடியோசை எத்தனை
    இயற்க்கை வான வேடிக்கை 

    சிறியவர் முதல் பெரியவர் வரை
    வானத்தில் சிதறி வெடிக்கும்
    மத்தாப்பூ , வெடி சத்தம் கேட்டு
    வானவேடிக்கை கொண்டாட்டம் 

    அந்திரத்தில் கயிற்றில் நடக்கும்
    வித்தை நகரும் கரிய வெண்
    மேகங்கள் வானத்து வேடிக்கை
    ஏராளம் தாராளம் என்றும் 

    வானத்து வேடிக்கையை
    அசை போட்டு இசை பாடும்
    பாடகர்கள் கவிஞர்கள் உயிர்
    சுவாசமாய் உறவாடும் நல்
    மனிதர்கள் காவியமாய் இன்றும்

    குளிர்காய இதமான தென்றல்
    தீண்ட , மழைச் சாரல் தூவ
    பனிமழை பொழிய இளம் காலை
    வெய்யல் பட எத்தனை சுகம்
    வானவேடிக்கை தரும் பரிசு

    மனம் குணம் மனித இனம்
    பண்பட்டு பலப்படிகள் உயர
    வழிகாட்டிடும்  இயற்க்கை வான்
    வேடிக்கையை தூண்  நிழல்
    போல் துணை நின்று காப்போம்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai