Enable Javscript for better performance
வான வேடிக்கை: கவிஞர் மா.உலகநாதன்- Dinamani

சுடச்சுட

    

    வானத்தில் தான் எத்தனை 
    வேடிக்கை! மேகமாய், மின்னலாய்,
    இடியாய், மழையாய் 
    இறங்கி எம் விவசாயியையும் 
    எம் வயிற்றையும் வாழ்விக்கும்!
    ஞாயிறென்றும் திங்கள் என்றும் 
    புதன்என்றும்  சனிஎன்றும் 
    கோள்களை அச்சு பிறழாமல் 
    சுற்றவைத்து அகிலத்தை 
    வாழ்விக்கும்!
    வெட்டவெளித் தத்துவத்தின் 
    வெளிச்ச முகவரி.
    உனக்குள்ளே நான்,எனக்குள்ளே நீ
    என்ற உள்ளார்ந்த உலகத்தைக் 
    காட்டும்!
    எல்லாம் இதன்பால் உள,
    எனினும் 
    ஒண்ணுமேயில்லை எனும் 
    ஒப்பற்ற சிதம்பர ரகசியத்தை 
    ஒளித்து வைத்து அன்றாடம் 
    வேடிக்கை தான் செய்கிறது வானம்!! 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai