Enable Javscript for better performance
வான வேடிக்கை: பி.பிரசாத்- Dinamani

சுடச்சுட

    
    ​மண்ணில் திரியேற்ற... பட்டாசு மேல்சென்று
       வண்ணப் பூக்கோடி வான்தூவி விட்டதுபோல்
    விண்ணில் செய்கின்ற வேடிக்கை அவையாவும்
       கண்ணின் விருந்தாகும் மாற்றான கருத்தில்லை !
    
    உலகம் செல்கின்ற நிலைதன்னை நினைவேற்றி
       உணர்ந்து பார்த்தாலே பேருண்மை புலப்படுமே !
    விலகும் இம்மாயக் களிப்பெல்லாம் தூளாகி...
       நிகழும் மாசெல்லாம் ஓசோனில் திரையாக...!
    
    நொடியே நிகழ்கின்ற வேடிக்கை நாம்காண‌
          நெடுநாள் புவிவாழ்வைக் குலைத்திடுதல் முறையோமோ?
     விடியல் எனநம்மின்..சந்ததியர் அவர்காண...
        விடுவோம் இந்நாளே இம்மாய இன்பமதை !
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai