Enable Javscript for better performance
வான வேடிக்கை: ப. வீரக்குமார்- Dinamani

சுடச்சுட

    
    நெபுலா வெடிப்பின்
    நிகழ்வை உணர்த்தும்
    வர்ண ராக்கெட்டுகள்
    விஞ்ஞானத்தால் வந்த
    விபரீத விளைவின்
    வினைகள்,
    தீபத்தைத் துடைத்து
    தீபத்தை மறைத்து
    பரணில் பரப்பி
    மெழுகுவர்த்தி
    பட்டாசுக ளோடு
    பங்கெடுக்கும் நமது ஆற்றல்கள்
    மகிழ்வைத் தரும்
    மத்தாப்புகளையும்,
    மழங்க வைக்கும் வானவெடியாயும்,
    காசைக் காலியாக்கி
    சூழலைக் கெடுத்துக்
    கொண்டாடும், மனித நேயம்
    இரக்கங் கெடுத்து,
    சுய மகிழ்வைப் பறைசாற்றும்
    வெற்றுப் பண்டிகை, பின்
    வேதனை தரும் பண்டிகை
    வேண்டாம் பகட்டு
    வேண்டும் மனிதப் பற்று.
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai