Enable Javscript for better performance
வான வேடிக்கை: முகில் வீர உமேஷ்- Dinamani

சுடச்சுட

    

    குழந்தையின் சிரிப்பு மத்தாப்பு
    பிள்ளை விளையாட்டு கார்டூன்வெடி
    பிள்ளைகளின் கோபம் சீனிவெடி
    வாழ்வின் வளர்ச்சி பூத்தொட்டி
    உறவுகளின் நட்பு சக்கரம்
    விறகடுப்பின் நினைவு பாம்புமாத்திரை
    இளைஞரின் குறும்பு விசில்வெடி
    படைப்பாளரின் வெடி பென்சில்
    கணவனுக்குப் பிடித்தது லட்சுமிவெடி
    மனைவிக்குப் பிடித்தது சரவெடி
    குழாயடியில் வெடிப்பது ஸ்கைசாட்
    குடிகாரர் வெடி 5000 வாலா
    காதலன் வெடி பொட்டுவெடி
    காதலி வெடி கம்பிச் சக்கரம்
    தீவிரத்தின் வெடி வெங்காயம்
    தீமனத்து வெடி ஆட்டம்பாம்
    வாழ்க்கை இருட்டை யழிக்காமல்
    சமூகத்தைச் சாக டிக்கும்
    அந்நிய மோதந் தந்ந
    ஆழ்ந்த ரசாயன வழிபாடு
    தீபத்தை மறந்து, படடாசு
    தீயால் கொண்டாடும்
    மனம் மறைத்த வான
    வேடிக்கைகள் வாடிக்கையாய்!

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai