நதிக்கரையின் நினைவலைகள்: அழகூர். அருண். ஞானசேகரன்

காவிரியின்......----------------------------அன்னாளில் காவிரிநான் பாய்ந்தே வந்து      அன்னைதமிழ் நாடிதனின் தஞ்ஞை மண்ணில்,பொன்னதனை விளைவித்தேன் புகழ்தனைக் கண்டேன்,      பொன்னியென எனைபோற்றித் துதித்திடும் வகையில் !இன்னாளில் வரத்துடித்தும் இயன்றிட வில்லை,      இதயமிலார் எனைமடக்கி வைத்தார் அணையில் !என்னாள்தான் விடுதலையைக் காண்பேன் நானும் ,      இனியதமிழ் நாடுதன்னை நோக்கிப் பாய !கூவம் ஆற்றின்......-----------------------------------அன்னாளில் பச்சையப்ப வள்ளல் கூவம்      ஆறான என்னைநாடி குளித்தான் தினமும்!இன்னதனை என்றன்மனம் மறக்கா தென்றும்       இதுவெல்லாம் பழங்கதைகள் என்றே ஆச்சு !இன்றுநான் உள்ளநிலை தன்னைக் கண்டால்       யார்தானோ குளித்துயெழ என்னிடம் வருவார் ?என்றென்னை தூயவளாய் ஆக்கிட முனைவார்,      இணைகின்ற சாக்கடைகள் தன்னைத் தடுப்பார் ?பாலாற்றின்......-----------------------------பாலாறு என்றென்னை அனுதினம் போற்றிப்      பழந்தமிழர் வணங்கிதினம் மகிழ்ந்தார் அன்று !காலாற நடந்துவந்தேன் தமிழகம் நோக்கி,      கயவர்களே எனைதடுத்து விட்டார், இதனைப்போலவொரு தவறுண்டோ அறியேன் நானும்,      பொறந்த வீட்டில் பெண்ணைவைத்துக் கொள்பவர் எவரோ ?ஞாலமிதில் இதற்கெனவோர் சட்டம் இருந்தும்       நாணயமே இல்லாதார் இதனைமறந் தாரே !யமுனா நதியின்......--------------------------------------என்றன்கரை ஓரத்திலே எண்ணற்ற நகரங்கள்      எழில்மிக்க மதுராவும் அவைகளிலே ஒன்று !நன்றான எழிற்சோலை பிருந்தாவனந் தன்னில்      நாளெல்லாம் கூடிடுவார் கோபியர்கள் அங்கே !தென்றலிலே தவழ்ந்துவரும் கண்ணனவன் குழலோசை,      தேனதுவே நாவில்வந்து பாய்ந்ததுபோல் இனிக்கும் !கண்ணனுடன் ஆடிப்பாடி களித்திடுவர் பெண்கள்,       கருத்தினிலே அன்னவன்மேல் காதல்தனைக் கொண்டே !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com