நதிக்கரையின் நினைவலைகள்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

ஓடிக்கொண்டிருந்த ஓர் நதி இன்றுமுடங்கிக் கிடக்கிறது!நீரோடிய இடங்களில் எல்லாம் சீமைக் கருவேலமரங்கள் வேர்பிடித்திருக்கின்றன!உயிரான நீர் ஓடவில்லை!உடலான மணல் காணவில்லை!நதி பெருக்கெடுத்து நுரைததும்ப ஓடிய நாட்கள்நினைவில் பெருக்கெடுக்கின்றன!ஆடிப்பெருக்கில் மக்கள் கூடி நின்றபோதுஆர்பரித்து ஓடிய நதியலைகள் ஓய்ந்து போகவில்லை!ஆலமரத்துக்கரையோரம் படித்துறையில்பசங்களோடு உள் நீச்சல் ஆடிய நதி!காலமான பெருசுகளை  கரைசேர்த்து முழுகிகரையேற்றிய நதி!முப்போகம் விளைச்சளுக்கு முழுசாகபாசனம் தந்த பாசமிகு நதி!ஊர்த்தாகம் தீர்த்து வைக்க ஊருணியாகவலம் வந்த நதி!ஐப்பசி கார்த்திகை அடைமழையில் ஆர்பரித்துபொங்கி வெள்ளம் வடித்த நதி!சித்திரை வெயிலில் திருவிழா மைதானமாகிதித்தித்த நதி!அத்தனையும் இழந்து அமங்கலியாய்அழுதுவடிகையில் ஆற்றாமை பெருக்கெடுக்கிறது!மனிதனின் பேராசை மயக்கத்தில்மரணித்த நதிக்கரையில் இன்னும் ஜீரணிக்கவில்லைநதிக்கரை நினைவலைகள்! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com