நதிக்கரையின் நினைவலைகள்: ரெத்தின.ஆத்மநாதன்

ஓடுகின்ற நதியின் ஓர் ஓரப்படித் துறையில்சேற்றுக் கால் கழுவி சில்லென்று நிமிர்ந்தபோதுசிலை போல அவள் நின்றாள் சிரிப்பை உதிர்த்தபடி!இறங்குகையில் இல்லாத எழிலான சிலையொன்றுஏறுமுன்   அங்கே   எப்படித்தான்    வந்ததென்று எண்ணிய படியே  நான்  ஏகினேன் அவளருகில்!'கண்ணாளா!'என்று காதுகளில் தேன் ஊற்றி'இந்நாளுக்காய் நான் எத்தனை நாள் தவமிருந்தேன்!'என்றவளின் வார்த்தையில் இதயம் குளிர்ந்திட்டு!வினாடி நேரத்தில் வியப்பாய் எலாம் மாறிபூவுலகம் நொடியில் புதிதான சொர்க்கமாகமாறிப் போனதெப்படி?மங்கை அவளாலோ!?ஆற்றுப் படித்துறையே எங்கள் அன்பு மனங்கண்டுஊற்றுத் துறையாகி  உதிரம் சேர வைத்துமாற்று நினைவின்றி மகிழ வகை செய்யும்!எட்ட நின்றபடி என்றைக்கும் நெறி தவறாமல்ஒற்றை  உயிராகி  உருமட்டும்   இரண்டாகிபற்றை மனமெங்கும் பரவவிட்டு மகிழ்ந்திருந்தோம்!பாரதத்தில்  ஜாதியினை  பரப்பியது  யாரென்றுதேடுகிறேன் நானுந்தான்  தேம்பி  அழுதபடிகாரணத்தைக் கூறினால் கண்ணீர் சிந்திடுவீர்!கீழ்ஜாதி அவளென்று கிளர்ந்தெழுந்த பெற்றோரைஅடக்க   வகையின்றி   அடியேனும்   தாமதிக்கஆற்றுப் புனலூடே அவள் கலந்தாள் சடலமாக!ஆற்று நீர் வந்துவிட்டால் அவள் நினைவில் நானுந்தான்படித்துறையே கதியென்று பகலிரவு பாராமல்கிடக்கின்றேன் நாராய்!கிளர்ந்தெழுந்து வருவாளா?!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com