சுடச்சுட

    
    உண்மையைச் சொன்னவனை உலகம்  வெறுக்குமடா 
    உதவி செய்ய நினைத்தால் உள்ளத்தைப்  பறிக்குமடா !
    
    உள்ளத்தை  கல்லாக்கி  ஏழை போல் வாழ்ந்துவிட்டால் 
    வாழ்க்கை என்றும் போர்களமாய் என்றும் மாறாதடா !
    
    இரக்கம் கொண்டவனை உலகம் எதிரி என சொல்லுதடா 
    இல்லாதவன் ஏங்கும்  நிலையில் எட்டி உதைக்குதடா !
    
    
    உலகில் மரதுன்பமுற்று ணத்தில் மட்டும் உயர்வு தாழ்வு  இல்லை 
    இறைவன் இதற்கு மட்டும் வைத்தான்  எல்லை !
    
    எந்த கடவுளுக்கும் காது கேட்கலே, ஏழையை எட்டிப்பார்க்கலே 
    வாழ்ந்தாலும், இறந்தாலும் ஏன் என்று கேட்க  ஆள்  இல்லே !
    
    இன்பத்தை தேடித் தேடி   ஏழை நெஞ்சம்  ஏங்குது 
    அன்பிலார் வீட்டில் அது ரொம்ப நாளா தூங்குது 
    
    வாழ்க்கை எல்லாம் துன்பமுற்று,மற்றவர் ஏமாற்றும்போது 
    எங்கே முன்னேற்றம் மனித வாழ்க்கையில் என கேட்க தோணுது !
    
    வாழ்க்கை ஓர் போர்க்களம்,  ஒவ்வொரு வீட்டிலும் அமர்க்களம் 
    வியர்வை சிந்தி பாடுபட்டாலும், ஏழையாய் சாவதே  விதியாகும் !
    
    விதியை  என்றும் மதியால்  எதிர்கொண்டு வென்றிடலாம் 
    ஒற்றுமை எனும் ஆயுதத்தை கையில்  ஏந்திடலாம் 
    
    அடக்குபவனை ஒன்றாய்க்  கூடி எதிர்த்திடலாம் 
    வாழ்க்கை எனும் போர்க்களத்தில் வெற்றிவாகை சூட்டிடலாம் !
    
    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai