சுடச்சுட

  

  வாழ்க்கையெனும் போர்க்களம்: கவிஞர் இளவல் ஹரிஹரன் 

  By கவிதைமணி  |   Published on : 02nd June 2018 08:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  போர்க்களமாய் வாழ்க்கையது வான பின்பு
       புறமுதுகைக் காட்டாமல் எதிர்த்து நின்று
  பார்க்கின்றோர் வியக்குவணம் வெற்றி யோன்றே
       பரிசாகப் பெறுகின்ற முனைப்பைக் காட்டி
  நேர்க்கோட்டில் பயணிக்கும் நெஞ்சங் கொண்டு
       நிலைமாறிப் போகாமல் வெல்ல வேண்டும்
  ஊர்ச்சபையின் நடுவினிலே நடந்தால் மாலை
       உயர்தோளில் விழவேண்டும் பெருமை கொண்டே.
  
  வாழ்க்கையென்றும் சோலைகாணும் வசந்த மல்ல.
       வழியெங்குந் தடைக்கற்கள் நிற்கும், மீறிச்
  சூழ்கின்ற தீவினைகள் நீங்கிச செல்ல
       தொடர்நாட்கள் இடரின்றி வாழ லாமே.
  ஆழ்மனதில் எப்போதும் அணையாத் தீயாய்
       அமைகின்ற தன்னம்பிக் கையைக் கொண்டு
  வீழ்ந்திடாது வெற்றியினைக் காண லாமே
       வெல்கின்ற மனப்பாங்கைப் பேண லாமே.
  
  பூக்களெலாம் முட்களோடு போராட் டங்கள்
       பொழுதெல்லாம் கண்டுவிட்டு மலரு மன்றோ.
  ஊக்கமதைக் கொண்டாலே ஊழை வெல்லும்
       உறுதியிங்கு கிடைக்குமென்ற மொழியி ருக்கத்
  தேக்கமின்றி வாழ்க்கையெனும் போர்க்க ளத்தைத்
      தெம்புடனே எதிர்கொள்ளும் உணர்வு தோன்றும்
  நோக்கமதே நம்வாழ்வில் நிறைய வேண்டும்
      நோகாமல் வெற்றிநமைச் சேரு மன்றோ!
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai