சுடச்சுட

  

  வாழ்க்கையெனும் போர்க்களம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி

  By கவிதைமணி  |   Published on : 02nd June 2018 08:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரசனாய்ப்பிறந்து
  துறவியுடன் வளர்ந்தான்--
  கலைகள் அறுபத்தி நான்கினையும்
  கசக்கிப்பருகினான்.

  கலைமகளுக்கே பொறாமை –
  வில்லை, விஷ்ணுவின் வில்லை
  முறித்தால் தான் உண்டு –
  ஜனகனின் தேர்வில் முதலிடம்..
  கைக்குள் விழுந்தாள்
  பூமியின் மகள் –

  சின்னத்தாயின்
  எண்ணக்கசிவுகளைத்
  துடைக்க
  வனத்துறையின்
  வரவேற்பை ஏற்றான் –

  இவனின் இனியவள்
  இலங்கை அரசனிற்கு
  இலக்கா ?

  இலகுவாய் விழுந்தான்
  மானின் மாயையில்—
  குரங்கு இல்லையென்றால்
  குணாளன் இல்லை –
  அனுமனின் அறிவால்

  உயிருடன் ஒரு குடும்பம் –
  சேது ,
  நிஜக்கடலிற்கா,
  கஷ்டக்கடலிற்கா,
  தாண்டி தான் வீழ்த்தினான்
  பத்து தலை பித்தனை –
  மீட்டான்,  
  மிதிலையின் மின்மினியை—
  கடவுளின் வாழ்க்கைக்கயிறே
  துன்பச்சிக்கலில் –
  மனிதனிற்கு ?

  நான் மட்டும் இந்த
  வாழ்க்கை ப்போர்க்களத்தில்
  கவலையின்றி — எப்படி ?
  என் அறிவுக்கண்ணன்
  எனக்காக தன்னம்பிக்கை கீதையை
  தொடர்ந்து போதித்த வண்ணம் --

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai