Enable Javscript for better performance
வாழ்க்கையெனும் போர்க்களம்: கவிஞர் பூ.சுப்ரமணியன்- Dinamani

சுடச்சுட

    

    வாழ்க்கையெனும் போர்க்களம்: கவிஞர் பூ.சுப்ரமணியன் 

    By கவிதைமணி  |   Published on : 02nd June 2018 08:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கருவறையிலிருந்து 
    கல்லறை வரைக்கும் 
    மனித வாழ்க்கையே 
    இனிய போர்க்களம் !

    குழந்தையைப் பெறும்
    அம்மாவுக்கு 
    பத்து மாதமும் 
    இன்பப் போர்க்களம் !

    தாயின் கருவில் 
    இருளில் சுழன்ற சிசு
    வெளிச்சத்தைக் காண 
    துடித்த துடிப்பும்
    ஒரு போர்க்களம் !

    வளர்ந்த பிள்ளையை 
    பள்ளியில் சேர்த்து 
    படிக்க வைப்பதும் 
    தந்தையும் தாயும் நாளும்  
    சந்திப்பது போர்க்களம் ! 

    படிக்கும் மாணவனுக்கு 
    பரீட்சை வந்து விட்டால் 
    தேர்வு முடிவு வரைக்கும்
    கல்விக்கூடமே 
    ஒரு போர்க்களம் !

    இல்லற வாழ்வில் 
    உள்ளம் மகிழ 
    நல்ல மனைவி மக்கள் 
    அமைவது வரைக்கும் 
    இல்லறமே போர்க்களம் !

    இளமையில் மகிழ்ந்து
    முதுமையில் நோயின்றி 
    வாழ்ந்து கல்லறை 
    செல்லும் வரைக்கும் 
    வாழ்க்கையே போர்க்களம் !

    உலகில் மனித 
    வாழ்க்கையே போர்க்களம் 
    வாழ்ந்துதான் பார்க்கலாம் !

    வாழ்க்கையெனும் போர்க்களம்
    நாம் நினைத்தால் 
    அமைதிப்பூங்காவாக மாற்றலாம்! 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai