சுடச்சுட

  

  வாழ்க்கையெனும் போர்க்களம்: கவிஞர் ராம்க்ருஷ்

  By கவிதைமணி  |   Published on : 02nd June 2018 06:08 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மணமுடிப்பது இல்லற வாழ்வில் நுழையவே
  குணங்களறியுமுன் இல்லற சுகம் தொடங்கும்
  பணமெனும் பொருளாதாரம் வாழ்வின் ஆதாரம்
  குண மாறுபாடுகளால் அது குடும்பப் போராகலாம்
  
  பொருள் குறைவே மனப் போரின் தொடக்கமாகிட
  இருள்சூழும் மனதில் எதிரி யாரென்று தெரிவதில்லை
  சுருள் சுருளாகக் கவலைக் கம்பிகள் தடுக்கும் எங்கும்
  மருள் வந்து மனமெங்கும் சூழ வலியம்புகள் தைக்கும்
  
  ஒருபுறம் உண்ண உணவு உடுக்க உடை தேடலாகி
  இருக்க வீடின்றி படும் தொல்லை எதிரிக்கும் வேண்டா
  உருவான மகவுகள் கல்வி கற்கப் படும்பாடு ஏராளம்
  விரும்பும் பாடம், பணி கிடைக்கப் போராட்டங்களே
  
  திருமண பந்தத்தில் இணைக்கப் படும்பாடும் பெரிதே
  வருமானம் செலவு என விழிபிதுங்கும் சண்டைகள்
  உருவாக்கப்படும் திருமண சண்டைகள் போர்க்களமே
  தருவாக வளராமல் வெட்டி வீழ்த்துவதும் வீரமே
  
  உறவுகள் பிணைப்புகள் பாசத்தின் விளைநிலமானால்
  பறவையின் கூட்டு வாழ்க்கை பலன்தர ஏதுவாகும்
  கறவை மாடென அன்புப் பால் எப்போதும் சுரக்கும்
  மறவராய் வாழ்க்கையின் போர்க்களம் வெல்லலாம்
  
  வாழ்க்கையெனும் போர்க்களத்தில் வெற்றி என்பது
  சூழ்ந்த சூழலை அன்பு மயமாக்கி அரவணைப்பதில்
  ஆழ்ந்த புரிதலில் பரிமாற்றங்கள் பரிணமிப்பதென
  வாழ்வு வளமான பாதையில் செல்ல முயல்வதாகும்
  
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai