சுடச்சுட

  

  வாழ்க்கையெனும் போர்க்களம்: சரஸ்வதி ராசேந்திரன்

  By கவிதைமணி  |   Published on : 02nd June 2018 07:43 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வாழ்வில் ஏற்றமும் தாழ்வும் இயல்பே தான்
  தாழ்வே தினந்தோறும் என்றால் வாழ்வதெப்போ
  மண்மீது எண்ணியபடி வாழ்ந்தவர் இல்லை
  மரண வலி தருகின்ற வாழ்வின் தொல்லை
   
  ஏர் பிடித்து வாழ்ந்தவர்களை மூளியாக்கி
  போர் முனைக்கு மக்களை கொண்டு சென்றார்
  தினம் நடக்கும் போராட்டங்களில் மக்கள்
  மனம் ஓய்ந்து தடுமாறி நிற்கின்றார்
  
  சந்தையென கல்வியாக்கி விற்கின்றார்
  சாதியைத் தூண்டிவிட்டு குளிர் காய்கின்றார்
  காவலாய் இருக்க வேண்டியவர்களே
  கயமைத்தனம் செய்கிறார் கவலையின்றி
   
  வழியெல்லாம் வன்மங்கள் ஒரு நாள்கூட நிம்மதியில்லை
  வங்கி ஊழியர்களேமக்கள் பணத்தைத் திருடுகிறார்கள்
  ஊர்விட்டு எங்கு சென்றாலும் போர்க்களம்தான்
  உருப்படியில்லா அரசால் வாழ்க்கையே போராட்டம்தான் 
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai