சுடச்சுட

    

    வாழ்க்கையெனும் போர்க்களம்: சீர்காழி .ஆர்.சீதாராமன்

    By கவிதைமணி  |   Published on : 02nd June 2018 06:35 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தாயின்   கருவறையில் 
    தொடங்கி கல்லறை வரை
    மனிதன் எடுத்து வைக்கும்
    ஒவ்வொன்றும் போராட்டமே 

    இயற்க்கையை எதிர்கொள்ள
    திடீர் திடீர் உயிர் பலியை
    சமாளிக்க வாழ்க்கையெனும்
    போர்க்களம் போராட்டமே 

    பிறப்பு படிப்பு வளர்ப்பு 
    திருமணம் வேலை இப்படி
    வாழ்க்கையெனும்  நிலை   
    கடுமையான போராட்டமே 

    மனிதப் பிறப்பு  என்றும் 
    எதிர்கால தேடல் தேடல்
    என்று  திணறும் வாழ்க்கை 
    புதுக் கோண போராட்டமே

    பெண் பிள்ளைகளாக
    பிறந்தால் அன்று முதல் 
    வாழ்வின் ஒவ்வொரு இடமும்
    கட்டமும் போராட்டக்களமே
      
    மாற்றுத்திறனாளி மற்றும்   
    திருநங்கை என்று வந்து
    விட்டால் விடியும் பொழுது
    எல்லாம் போர்க்களமே.. "

    முதுமையும் இயலாமையும்
    துணை இல்லாத வாழ்வும்
    அனாதையின் வாழ்வும்
    கொடுமையான போர்க்களம். 

    எதிர் நீச்சல் விடா முயற்சி
    கடுமையான உழைப்பு தன்
    நம்பிக்கை ஈடுபாடு மாற்றும்
    வாழ்க்கையெனும் போர்க்
    களத்தை    நித்தமும் .... "

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai