சுடச்சுட

  

  வாழ்க்கையெனும் போர்க்களம்: தா. ஹெலன் பிரபாகரன்

  By கவிதைமணி  |   Published on : 02nd June 2018 07:03 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உடைந்து போன உள்ளம்
       மீண்டும் சீர் பெறுமோ??
  நசிந்து போன வாழ்க்கை
       அது மீண்டும் செழிப்பாகுமோ??
  கண்ணீரின் பள்ளத்தாக்கில் மூழ்கிய
       கண்கள் புத்துணர்வு பெறுமோ??
  ஓடோடி களைப்படைந்த கால்கள்
       இளைப்பாற நேரம் கிடைக்குமோ??
  அன்பிற்காய் ஏங்கும் உள்ளம்
       அது மகிழ்ச்சியில் திளைக்குமோ??
  வசைச்சொற்களே விழுகின்ற காதுகளில்
       தேன்சொற்கள் வந்து ஆற்றுமோ???
  இவ்வித ஏக்கங்கள் மத்தியில்
        போராடுகிறேன் ‘வாழ்க்கையெனும் போர்க்களத்தில்’
  இதயத்தின் ஓரத்தில் நம்பிக்கையோடும்,
        முகம்தனில் தவழும் புன்னகையோடும்… 

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai