சுடச்சுட

    

    வாழ்க்கையெனும் போர்க்களம்: நெருப்பலைப் பாவலர். இராம இளங்கோவன்

    By கவிதைமணி  |   Published on : 02nd June 2018 06:27 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கல்லெடுத்து நா(ர்)உறிப்பார்; 
        காற்றினையும் நஞ்சாக்கிப் 
    பொல்லாத செயல்விளைப்பார்; 
        புண்ணில்வேல் பாய்ச்சிடுவார்; 
    எல்லோர்க்கும் உள்ளவற்றை 
         எனக்கென்று பறித்திடுவார்; 
    வல்லமையால் தீங்கிழைக்க 
         வாழ்வுபோர்க் களமாகும்!

    பொதுவான விடியலினைப் 
          பதுக்கிடுவார் தனதென்று; 
    மதுவினிலே குடியிருப்பார்; 
           மாண்புகளைக் கற்பழிப்பார்; 
    பதுமையெனப் பேசிடாத 
          பாமரரின் உழைப்புறிவார்; 
    சதுரங்கக் காய்களாக 
          சாகடிப்பார் நல்வினைகள்! 

    இயல்பான இயற்கைவளம் 
          இயன்றவரை திருடிடுவார்; 
    செயற்கைகளால் மண்ணுயிரைச்    
           சிதைத்திடுவார்; நலங்கெடுப்பார்; 
    வயல்பயிராய்த் தீவினைகள் 
           விளையவைத்து உயிரறுப்பார்; 
    பழியாகி  வாழ்க்கையெனும் 
           போர்க்களமாய் மாறிற்றே! 

    கல்லாரும் இல்லாரும் 
         செல்வந்தர் அரசியலார் 
    பொல்லாரும் உள்ளதனால் 
         எல்லையில்லா வேறுபாட்டில் 
    நல்லறத்து வாழ்க்கையெனும் 
          நிலமின்று போர்க்களமாய் 
    அல்லலுறும் நிலையதனை 
          அமுதமென மாற்றுவமே! 

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai