சுடச்சுட

    
    வாழ்க்கை என்பதே போர்க்களம் 
    ஏனெனில்  -  அது 
    நேற்று உதிர்ந்த இறந்தக்காலத்தையும்
    இன்று  பூக்கும் நிகழ்க்காலத்தையும் 
    நாளை பூக்கவிருக்கும்  எதிக்காலத்தையும்
    காட்டும்  காலக்கண்ணாடி என்பதால்!
    
    வாழ்க்கை என்பதே  போர்க்களம்
    ஏனெனில்   -   அது  
    சமுதாயம்  தள்ளாடும்  பொழுது  
    அதை  எழுப்பி  நிறுத்த 
    உதவும்  போர்வீரர்கள்  நிறைந்திருப்பதால்!
    
    வாழ்க்கை  என்பதே  போர்க்களம் 
    ஏனெனில்  - அது  
    இயற்கை தோற்றத்தையும் 
    செயற்கை மாற்றத்தையும்  
    உணரச் செய்யும்  பண்பு 
    நிறைந்த விஞ்ஞானி என்பதால்!
    
    வாழ்க்கை  என்பதே  போர்க்களம் 
    ஏனெனில்    - அது 
    மனிதனின் வாழ்வில்  பல 
    பெருக்கல்  வகுத்தல்களை 
    போட உதவும்  கரும்பலகை என்பதால்!
    
    வாழ்க்கை  என்பதே  போர்க்களம் 
    ஏனெனில்   -  அது 
    மனிதன்  நடிக்கும்  நாடக மேடையாகி 
    அவனை  உணரச் செய்வதால்!
    
    எனவே   -   வாழ்க்கையெனும்  போர்க்களத்தில் 
    போராடி  ஜெயித்தால் 
    காண்பது   சொர்கம்!  இல்லையெனில் 
    காண்பது திரிசங்கு சொர்கம்!
                                                    
    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai