சுடச்சுட

  
  இயற்கை அருமையை புறந்தள்ளி
  செயற்கை நோக்கிய பயணத்தில் 
  நஞ்சாகித் தான் போனது
  பிஞ்சுகளின் வாழ்க்கை இன்று!
  
  மது என்னும் அரக்கனின்
  மடியில்வீழ்ந்துகிடக்கும்குடிமக்கள்! 
  மறந்து போன அடிமைவாழவில்
  மாட்டிக்  கொண்ட அவலம்! 
  
  சுத்தமான நீரும்காற்றும் கேட்டதால்
  சுட்டுவீழ்த்தப்பட்ட. கொடுமை! 
  சுற்றுச்சூழலும் மாசுற்றது
  சுதந்திரவாழ்வும் பறிபோனது! 
  
  வேற்றுமையில் ஒற்றுமை கண்ட. பூமியில் 
  வேர்கள் இற்றுப்போனதோ இன்று? 
  பந்த பாசம் பண்புதனை இழந்து
  பதவிவெறி பணத்தாசையால்
  எத்தனை எத்தனை போராட்டங்கள்
  எம்மமண்ணில் எங்கு நோக்கினும்!
  
  தட்டிப்பறிப்பவர்வாழ்ந்ததில்லை! 
  விட்டுக்கொடுப்பவர்வீழ்ந்ததில்லை!
  வாழ்க்கைத் தத்துவம் அறிந்து
  வளமான சிந்தனைகளை
  வளர்த்தால்
  வாழ்க்கையெனும் போர்க்களம்
  வாசம் வீசும் பூந்தோட்டமாக மலருமன்றோ?
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai