சுடச்சுட

    
    குழந்தை ஒன்று வீட்டில் பிறக்கையில் 
    ஒரே அமர்க்களம் அந்த வீட்டில் !
    குழந்தை தவழ்ந்து ஓடி விளையாடும் 
    தருணம் விளையாட்டு தளம் ஒன்று 
    உருவாகுது அதே வீட்டில் ! 
    
    விளையாட்டு போல நாட்கள் கடந்து 
    அந்த குழந்தைக்கும் ஒரு குழந்தை 
    பிறக்கும் நேரம் மீண்டும் அதே 
    அமர்க்களம் அந்த வீட்டில் ! 
    
    அமர்க்களமாக  ஆரம்பிக்கும் ஒரு 
    "குழந்தையின்" வாழ்க்கை என்றுமே 
    ஒரு விளையாட்டுதான் ...விதி என்று 
    ஒன்று  நடுவில் விளையாடாமல் இருந்தால் !
    
    விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் 
    சகஜம் என்று புரிந்தால் விதியின் விளையாட்டும் 
    வாழ்வின் சிகரம் தொட கிடைத்த ஒரு 
    ஒரு படி கல்லே   என்ற உண்மையும் 
    தன்னால் புரியும் எந்த "குழந்தைக்கும்" !
    
    வாழ்க்கையே ஒரு விளையாட்டு என்று 
    புரிந்தால் போர்க்களம் ஆகாது  வாழ்க்கை 
    என்றும் ! 
    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai