சுடச்சுட

  

  வாழ்க்கையெனும்  போர்க்களம்: பாவலர் கருமலைத்தமிழாழன்

  By கவிதைமணி  |   Published on : 02nd June 2018 07:36 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஊழ்வினைதான் எனயெண்ணி  அமைதி யாக
        உள்ளவாழ்க்கை போதுமென்போர்  கோழை யாவர்
  வாழ்க்கையெனும் போர்க்களத்தில்  எதிர்த்து நின்று
        வருகின்ற  தடைகளினைத்  தகர்க்க வேண்டும் !
  வீழ்த்துதற்கும்  முதுகினிலே  குத்து தற்கும்
        வினையாற்றும் உட்பகையை  முறிய டித்தே
  ஏழ்மைக்குத்  துவளாமல்  எழுச்சி  யோடே
        எழுந்துழைத்தால்  வறுமையிங்கே  ஓடிப் போகும் !
  
  மூத்தோனாய்ப் பிறந்திட்டால்  முதுகின் மீது
        மூட்டைகளாய்ச்  சுமைகளினைச் சுமக்க வேண்டும்
  காத்திருந்தே  இளையோரைக்  கரையை ஏற்றிக்
        காவலனாய்க் குடும்பத்தைக்  காக்க வேண்டும் !
  சூத்திரங்கள்  புதிர்கணக்கை  வடுவித்  தல்போல்
        சூழ்ச்சிகளின்  முடியவிழ்த்துப்  பேண வேண்டும்
  ஏத்திவிடும் ஏணியாக  வாழ்க்கை  தன்னில்
        எதிர்பாராத்  திருப்பங்கள்  கடக்க வேண்டும் !
  
  பெற்றோர்கள்  உடன்பிறந்தோர்  மனைவி யோடு
        பெற்றெடுத்த  குழந்தைகளின்  தாக்கு தல்கள்
  சுற்றத்தார்  சமூகத்தார்  ஆட்சி யாளர்
        சூழ்ந்திருப்போர்  கொடுக்கின்ற  நெருக்கு தல்கள் !
  சுற்றுபுறம்  நதிகாற்றில்  மாசு சேர்த்து
        சுழன்றடிக்கும் இயற்கையதன்  பேரி டர்கள்
  முற்றாக  இவைகளிலே  மூழ்கி  டாமல்
        முன்னேறல் தாம்வாழ்வின்  வெற்றி யாகும் !
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai