சுடச்சுட

    

    வாழ்க்கையைனும் போர்க்களம்: ரெத்தின.ஆத்மநாதன்

    By கவிதைமணி  |   Published on : 02nd June 2018 08:56 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாழ்க்கையே யிங்கு போர்க்களந்தான்
    வறுமையில்   வாழும்    வக்கற்றோர்க்கு!
    வாழ்க்கையே  யிங்கு  போர்க்களந்தான்
    வாய்மையுடன்  வாழ  நினைப்போருக்கு!
    
    வாழ்க்கையே யிங்கு போர்க்களந்தான்
    வாய் பேசாமல் கடமை செய்வோருக்கு!
    வாழ்க்கையே யிங்கு போர்க்களந்தான்
    வஞ்சகமின்றி  வாழ  நினைப்போருக்கு!
    
    வாழ்க்கையே யிங்கு போர்க்களந்தான்
    வஞ்சியர்  தம்மில் அழகுடையோர்க்கு!
    வாழ்க்கையே யிங்கு போர்க்களந்தான்
    வாழ்நாளெல்லாம் நன்மை செய்வோருக்கு!
    
    வாழ்க்கையே யிங்கு போர்க்களந்தான்
    வாஞ்சை   மிகுந்து  வாழ்வோர்தமக்கு!
    போர்க்களமாக்கும் பொறுக்கிகள் தம்மை
    பொசுக்கிவிட்டு    உயர்ந்திட   வேணும்!
    
    பொய்யேபேசி     புகழில்     வாழும்
    புளுகர்களை   அழித்திட  வேணும்!
    காலமும்  பொழுதும்  களைத்திடாமல்
    கடமை   செய்யும்  கண்ணியவான்கள்
    நிம்மதியாக    நித்தம்     வாழ
    நெஞ்சில்உறுதி   மிகவும்  கொண்டே
    உழைத்திட வேண்டும் உறுதியாக!
    
    அரசியல்  பெயரால்  அக்கிரமங்கள்
    அதிகம் செய்யும் உளுத்தர்தம்மை
    ஓட ஓட  விரட்டிட  வேண்டும்
    ஒருவர்கூட மிச்சம் வைக்காமல்
    அழித்திட வேண்டும் அமைதியாக!
    
    
    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai