சுடச்சுட

  

  வாழ்கை யெனும் போர்க்களம்
  வாழ்ந்து தான் பார்க்கலாம்
  முட்கள் கொண்ட படுக்கையே
  முயன்றால் கனவும் காணலாம்

  கற்கள் கொண்டு வீசுவோர்
  வழி நெடுக நிற்கலாம்
  சொற்கள் கொண்டு தாக்குவோர்
  வீண் பழியும் சுமத்தலாம்

  படைத்தவனும் நம் பக்கம்
  திரும்பிப் பார்க்க மறுக்கலாம்
  விடை தெரியா கேள்விகள்
  பின் தொடர்ந்தே துரத்தலாம்

  கஷ்ட மெனும் பெருமழை
  அடை மழையாய் பொழியலாம்
  இஷ்டம் கொண்ட நபரின்றி
  வாழ்வின் பாகம் கழியலாம்

  எவருக் கில்லை துன்பமே
  கண்ணீ ரில்லா வாழ்க்கையோ
  எதிர் நீச்சல் போட்டிட
  இன்பம் ஒருநாள் தழுவுமே

  தோல்வி கண்டு துவண்டிட்டால்
  வெற்றி எப்படி கைவரும்?
  துக்கம் விட்டு வராவிட்டால்
  பக்கம் வருமோ மகிழ்ச்சியே!

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai