சுடச்சுட

  

  வாழ்க்கையெனும் போர்க்களம்: அழகூர். அருண். ஞானசேகரன்

  By கவிதைமணி  |   Published on : 03rd June 2018 02:10 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வாழ்க்கையெனும் போர்க்களத்தில் வீழ்ந்தவர்கள் கோடி
     வகையாக வெற்றிதனைக் கண்டவர்கள் சிலரே!
  சூழ்கின்ற இடர்கள்தனை வெல்லும்திறன் வேண்டும்,
     சூழ்ச்சிதனை முறியடிக்கும் மதியைகொள்ள வேண்டும்!
  
  வீழ்வதற்கோ நாம்பிறந்தோம், உறுதிகுலை யாமல்
     வெல்வதுவே நோக்கமென்று துடித்தெழுதல் வேண்டும்!
  ஆழ்ந்திதனை சிந்தித்து வெல்வதுந்தன் கடமை
     அயர்ச்சிதனை கொண்டிட்டு ஓய்வதுவும் மடமை!
  
  ஊழ்வினைப் பயனெனன்று ஓய்ந்தவர் வாழ்வினில்
          உயர்வினைக் கண்டதில்லை,
     உறங்கிக் களித்திட்டு பின்னர்நாம் வருந்தியும்
          ஒன்றுமே நடப்பதில்லை!
  
  சூழ்ந்திட்ட துயர்கண்டும் கலங்கா திருப்பதே
          சுகமதைக் காணும்வழி,
      சோம்பலை வளர்த்தவர் பலனெனக் காண்பதும்
          சோகத்தைத் தானல்லவோ?
  
  பாழ்பட்டு நின்றவர் இளமையில் சுகமாய்
          பகலிலும் உறங்கியவர்,
      பலனென பின்னாள் வாழ்வினில் கண்டதும்
          பழியின்றி வேறொன்றில்லை!
  
  ஆழ்ந்திதை உணர்ந்திட்டு கருத்தினில் கொண்டவர்
          அழிவுறக் கண்டதில்லை,
      அனுதினம் வியர்வையை சிந்திட்டு உழைத்தவர்
          அவலத்தை ஏற்றதில்லை!
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai