சுடச்சுட

  

  வாழ்க்கையெனும் போர்க்களம்: கவிஞர் டாக்டர். இராஜலட்சுமி இராகுல்

  By கவிதைமணி  |   Published on : 03rd June 2018 02:08 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கையில் பிடிக்கும் நொடிக்குள்ளே
  காற்றாய் பறக்கும் தும்பிபோல்
  பொய்யாய் போகும் கனவுகளை
  நெஞ்சில் நிதமும் சுமக்கின்றோம்
  
  எட்டாக் கனியென இருந்தவைகள்
  எட்டிப் பிடித்திடும் தருணத்தில்
  தட்டிப் பறித்திடும் காலத்தால்
  ஏமாற்றத்தில் திளைக் கின்றோம்
  
  நிலையே இல்லா வாழ்வுதன்னில்
  நித்தமும் ஆயிரம் கோட்டைகளை
  கட்டிக் கொண்டே இருக்கின்றோம்
  இயல்பை ஏனோ மறக்கின்றோம்
  
  காலச் சக்கரச் சுழற்சிக்குள்
  கடந்து செல்லும் நிகழ்வுகளின்
  கைதி யாகித் தவிக்கின்றோம்
  சிக்கிச் சிறையில் கிடக்கின்றோம்
  
  வாழ்க்கை என்பது போர்க்களமே 
  சூழ்ச்சியும் திருப்பமும் நிறைந்ததுவே 
  வீழ்ச்சியும் எழுச்சியும் தொடர்கதையாய்த் 
  துரத்தி வருவது சத்தியமே
  
  சோதனை பலவகை வந்தாலும்
  தோல்விகள் துரத்தி அடித்தாலும் 
  துவளா மனதிட மதுகொண்டால் 
  வெற்றி என்பது சாத்தியமே !!!
  
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai