சுடச்சுட

  

  வாழ்க்கையெனும் போர்க்களம்: பெருவை பார்த்தசாரதி

  By கவிதைமணி  |   Published on : 03rd June 2018 01:58 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரசியலில் அடிக்கடி வரும் நெருக்கடிபோல் 
     அவ்வப்போது துன்பம் வரலாம் நம்வாழ்வில்.!
  இரக்கமற்ற செயல்களைச் செயும் சழக்கரால்
     இயல்பான வாழ்க்கையில் இடர் வந்துசேரும்.!
  சிரமமின்றி சீராகநம் வாழ்க்கை செல்தற்கே
     சித்தர்கள் சிந்தைபுக பலநல் வழிசொன்னார்.!
  வரவேற்று வகையாயதை மனதில் ஏற்றினால்
    வாழ்க்கை யெனும் போர்க்களம் இனிக்கும்.!
   
  வாழ்வில் துன்பங்கள் நெருங்கும் போதிலே
     வாழ்வு குறுக்கிய நல்லதங்காள்களும் உளர்.!
  வாழ்வு முழுதும் துன்பமே நிறைந்த போது
     வாழ்ந்து காட்டிய இராமர்களும் உள்ளனர்.!
  வாழ்வே சூனியத்தால் சூழ்ந்த போதிலும்
     வழிகாட்டினர் பாண்டவர்கள் நம் வாழ்வில்.!
  வாழ்க்கை என்பதே ஒரு போர்க்களமதில்
     வாழப் பழகுவதே இப்பிறவியின் நோக்கம்.!
   
  அயலான் நம்மையாட் கொண்ட போதிலே
    அன்று நாமடைந்த துயரத்திற்கு அளவேது.!
  கயவர்கள் செயும் கலவரத்தால் சிலசமயம்
     கால முழுதும் கலங்குகிறோம் கண்ணீரால்.!
  இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நமது
     இல் வாழ்விலெங்கோ இடிக்கிறது இடையூறு.!
  வியர்வை சிந்தியுழைக்கும் எண்ணம் வரின்
     வெல்லலாம் வாழ்வெனும் போர்க் களத்தை.!
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai