சுடச்சுட

  
  கருவிலே தோன்றியிடிலே போர்க்களம்
  கற்க அடி வைக்கையிலே போர்க்களம்
  வேலை கிடக்க அலைவது போர்க்களம்
  இல்லை நிம்மதி வாழ்வே போர்க்களமே
  
  அன்றாட வாழ்க்கையே அவதியிற்றே இன்று
  தென்றலே காணவில்லை புயலானதே இன்று
  குடிமக்கள் வாழ்க்கை கேள்வியாயிற்றே இன்று
  குடியே பழக்கமாயிற்று குடும்பமே போராடுகிறதே
  
  இலஞ்ச ஊழல் பேய்கள் தலைவிரித்தாடுதே
  வஞ்சகப் பணப்பேய்கள் பணம் குவிக்கிறக்கிறதே
  சாதகமான வாழ்க்கை வாழ்வோர் போர்க்களம்
  சாதகமாக உருவாக்கச் சாமானியர் சாகின்றனர்
  
  தரணியில் தமிழகம் போர்க்களமாயிற்று இன்று
  தண்ணீருக்குத் தவிப்பு விளைச்சல் பஞ்சம் இன்று
  தடியெடுத்தவன் தண்டல்காரன் அடிதடி எங்கும்
  அடியெடுப்பீர் அமைதி வாழ்வு அமைந்திட எங்கும்.
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai