Enable Javscript for better performance
வாழ்க்கையெனும் போர்க்களம்:  கு.முருகேசன்- Dinamani

சுடச்சுட

    
    மொத்த உயிரணுக்களில்
    ஒத்த உயிரணு
    கருமுட்டையில் இணைவதில்
    தொடங்குகிறது
    வாழ்க்கையேனும் போர்க்களம்!
    
    ஒன்றுமில்லாமல்
    பூமிக்கு வந்தவர்கள்
    ஒன்றுமில்லாமல்
    பூமிக்குள் போவதற்குள்
    சிலருக்கு
    வாழ்கையில் போராட்டம்!
    
    சிலருக்கு
    போராட்டமே வாழ்க்கை!
    
    குழந்தைப் பருவத்தில்
    பொம்மையோடு போராட்டம்!
    
    பள்ளிப் பருவத்தில்
    பரீட்சையோடு போராட்டம்!
    
    பள்ளிப் பருவம் முடிந்த பின்பும்
    நீளுதிங்கே நீட்டோடு போராட்டம்!
    
    பதின்பருவ காலத்திலே
    காதலோடு போராட்டம்!
    
    காதல் வேண்டாம் என்று சொன்னால்
    பெற்றோரோடும் போராட்டம்!
    
    குடும்ப வாழ்கையில் நுழைந்த பின்பு
    குழந்தைக்காக போராட்டம்!
    
    குழந்தை பிறந்த பின்தானே
    படிக்க வைக்க போராட்டம்!
    
    அடித்தட்டு மக்களுக்கு
    வயிறு நிரப்ப போராட்டம்!
    
    மேல்தட்டு மக்களுக்கு
    வயிறு நிரம்பியதால் போராட்டம்!
    
    அரசியலில் ஆள்வோருக்கு
    வருஷம் 365 நாளும் 356
    வராமல் காப்பதே
    போராட்டம்!
    
    மண்ணோடும் மழையோடும்
    ஆறோடும் நீரோடும்
    தான் பட்ட கடனோடும்
    போராட்டம் விவசாயிக்கு!
    
    அலையாடும் கடலோடும்
    வலையோடும்
    அன்றாடம் போராட்டம்
    மீனவனுக்கு!
    
    எரிவாயு விலை ஏற்றத்தால்
    ஏழைகள் வாழ்வில் போராட்டம்!
    பெட்ரோல் டிசல் விலையேற்றத்தால்
    எல்லோர் வாழ்விலும் போராட்டம்!
    
    வாழ்கையெனும் போர்க்களத்தில்
    தினம் தினம் போராட்டம்!
    பயந்தவன் துவண்டு விழுகிறான்
    துணிந்தவனே துள்ளி எழுகிறான்!
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai