சுடச்சுட

  

  வாழ்க்கையெனும் போர்க்களம்- செந்தில்குமார் சுப்பிரமணியன்

  By கவிதைமணி  |   Published on : 03rd June 2018 02:27 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அன்றொரு நாள் ஆணவம் கண் மறைக்க 
  மனமாயை அறிவழிக்க, 
  ஆலமர பிச்சை சாமியை 
  செருக்கோடு முறைத்திருந்தேன்,  
  வந்திர்ரானுங்க ஊர ஏமாத்த என்று.
  
  மாறாத புன்னகையும்
  வாறாத கேசமும் -யாரையும்
  பாராத முகமென வீற்றிருந்த 
  திருவோட்டு சாமி - 
  எனை தீட்சண்யமாய் பார்த்தது.
  தாட்சண்யம் பாராமல் - சீ என்றேன்,
  
  விட்டு விடப் போகுதுயிர்,
  விட்டவுடன் உடலைச்
  சுட்டு விடப் போகின்றார் சுற்றத்தார், 
  என்று ஏதோ முனுமுனுக்க,
  
  அப்படியா என்றேன்,
  எப்படியோ அதை மறந்து, 
  அன்றாட அலுவலில் எல்லாம் மறக்க,
  பிரிதொரு நாள் நண்பனுடன் 
  வாகனத்தில் பின் இருக்கைப் பயணம்,
  
  கண் விழித் துப் பார்க்க,
  சுற்றிலும் மருத்துவ முகங்கள்,
  நீ அதிர்ஷ்டக்காரன் உன் நண்பன் ஸ்பாட் என்றனர்,
  
  எதிரே சுவற்றில் ஒருவரின் புகைப்படம் தெரிந்தது,
  அட நம்ம பிச்சை சாமி என்றெண்ணி யா ரிவர் என்றேன் 
  ஆஸ்பத்திரி முதலாளி என்றதும்
  எங்கே அவர் என,
  எல்லாத்தையும் டிரஸ்டுக்கு 
  அர்ப்பணிச்சிட்டு எங்கேயோ - போயிட்டாரு என்றார்,
  
  அடுத்த நாள் தெருக்கோடிக்கு விரைந்தேன்,
  
  வித்தாரமும் -கடம்பும் வேண்டாவாம் 
  மடநெஞ்சே செத்தாரைப் போலத் திரி,
  என்றார் - பிச்சை - இல்லை 
  இல்லை முதலாளி மெல்ல,
  
  எனது ஆணவமும் நானும் 
  சாஷ்டாங்கமாய் விழுந்தோம் கீழே ...
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai