சுடச்சுட

  
  வாழ்க்கை யெனும் போர்க்களத்தில்
  வந்து குதித்து விட்டோம்!
  போர்க்கள மென்றாகி விட்டால்
  போரிட்டுத் தானாக வேண்டும்!
  
  போர் என்று சொன்னாலே
  ஆயுதத்தை ஏந்த வேண்டும்!
  ஆயுதங்கள் இங்கு பல
  அபரிமிதமாய் நமக் குண்டு!
  
  அன்பை ஆயுத மாக்கி
  அமைதியாய் இங்கு வாழ்ந்திடலாம்!
  பண்புடனே நாம் வாழ்ந்தால்
  பல்வகையில் மகிழ்ந் திடலாம்!
  
  பொறுமை கொண்டு வாழ்ந்தால்
  பூவுலகே சொர்க்க மாகும்!
  
  நாணத்துடனே நாம் வாழ்ந்தால்
  நல்லதே செய்தி டுவோம்!
  
  இனிமையாய் நாம் பேசி
  இன்பம் மிக வடையலாம்!
  
  கண்ணியம் காத்து வந்தால்
  காற்றும் நம்மை மதித்திடும்!
  
  வாழ்க்கையைனும் போர்க் களத்தில்
  வாழ்வாங்கு நாம் வாழ்வதற்கு
  நாம் எடுக்கும் ஆயுதமே
  நம்விதியை நிர்ண யிக்கும்!
  
  அன்பையே ஆயுத மாய் 
  அனைவரும் கை யெடுப்போம்!
  அரிதான பிறவி யிதை 
  அன்பு மயமாக்கி மகிழ்வோம்!
  
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai