சுடச்சுட

  

  வாழ்க்கையென்னும் போர்க்களம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு

  By கவிதைமணி  |   Published on : 03rd June 2018 02:05 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வாழ்க்கையென்னும் போர்க்களத்தில்
  அனுதினமும் போராட்டம்தான்!
  தினம் தினமும் பூத்திடுமே புதுப்புது பிரச்சனைகள்!
  பதுங்கு குழிகளும் கண்ணிவெடிகளும்
  இங்கு தாராளம்!
  
  துணிச்சல் இருப்பவன் துணிந்து இங்கே
  போராடி ஜெயிக்கின்றான்!
  தன்னம்பிக்கை என்னும் கதாயுதம்!
  தந்திடுமே என்றும் வாழ்க்கையெனும் போர்க்களத்தில்
  போராளிக்கு பெரும் வெற்றி!
  
  ஊக்கத்தை தொலைத்தோருக்கு என்றுமே துக்கம்தான்!
  தூக்கத்தை விரும்புவோருக்கு வாழ்க்கையில்
  என்றும் வெற்றிடம் தான்!
  வெற்றிகளை குவித்திட்டோர் வீண்ஜம்பம் பேசுவதில்லை!
  
  போற்றி பாடல்களை விரும்பிட்டோருக்கு
  ஏற்றம் என்றுமே நிலைப்பதில்லை!
  வஞ்சகம் வன்மம், பகை, சூது, பொறாமை, எரிச்சல்
  பொய் , களவு ,புனைச்சுருட்டு என்று பலவித ஆயுதங்கள்!
  
  போர்க்களத்தில் இத்தனையும் சமாளிக்கும்
  அன்பு எனும் ஒற்றை ஆயுதம்!
  வாழ்க்கை எனும் போர்க்களத்தில் அன்பும் நம்பிக்கையும்
  நம்மோடிருப்பின் நலமோடிருப்போம்!
  
  நம் கையில் வாழ்க்கை வீழ்ந்திருக்க
  நல் வாழ்க்கை பாடத்தை கற்பித்திருப்போம்!
  வாழ்க்கையெனும் போர்க்களத்தை
  நம்பிக்கையோடு எதிர்கொள்வோம்! வாழ்க்கைதரும் பாடங்களை
  வழிவழியே கற்றிடவே எதிர்காலம் எதிரிகள் இல்லா காலமாகும்
  இனிதாக பூத்திடும் போர்க்களத்தில்
  இன்பம் தரும் வெற்றி!
  
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai