Enable Javscript for better performance
வாழ்க்கையே போர்க்களம்:  ப.வீரக்குமார்- Dinamani

சுடச்சுட

    
    எறிபந்து போல்
    எறிந்த பின்னும்
    திரும்பி வந்து
     திருத்தம் தரும்,
    
    மயிலென்று
    மனதில் வடித்த பின்
    அது
    மயிலல்ல
    குயிலாகும்,
    
    மயக்கத்தைத
    தந்து
    இயக்கத்தை முடக்கும்
    விரக்தியின்
    வெளிப்பாடாய்,
    
    முயலகன் போல்
    முணகி முணகி
    மிதிபடும் நிலை
    அன்றாடம்,
    
    பணம் கூட
    பிணமாய் பார்க்கும்
    பிண்டித்த பொருளாய்,
    
    நிழல் கூட
    நிமிண்டிப்
    பார்க்குது − உனைத்
    தொடர்கிறேன்
    என்ன தருவா யென்று,
    
    ஒருபக்கம் பணம்
    மறுபக்கம் மனம்
    இரண்டிற்கு மிடையே
    இருட்டில் கரியைத்
    துடைக்கும் வேலை.......
    
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai