Enable Javscript for better performance
வெல்லும் சொல்: கவிஞர்  அரங்க.கோவிந்தராஜன்- Dinamani

சுடச்சுட

    
    அங்கேஉண்டு, இங்கேஇல்லை!என்று நண்பன்
    அடிக்கிக்கொண்டேபோனான்,என்ன – அங்குண்டு
    இங்கே என்ன இல்லை? என்றகேள்வி? பதிலளித்தான்
    வெல்லும் சொல் இன்மையறிந்து
    
    சுயகட்டுப்  பாடுடைய மக்களைக் காண்கின்றோம்
    அயல்நாட்டில் அங்கே, ஆனால் இங்கே – சுயநலமிகள்
    சொல்லமு டியவில்லை பதில் நண்பனின்
    வெல்லும் சொல் இன்மைஅறிந்து.
    
    கண்காணிப்பும் ,கட்டுப்பா டும்இருந்த  போதும் யாரும்
    காணதபோது விதிகளை மீறும் விற்பனர்கள்-காண்போம்
    சொல்லமுடியாத பதில் நண்பனின்
    வெல்லும் சொல் இன்மையறிந்து
    
    கள்ளச்சந்தை, கலப்படம்இல்லை அங்கே எல்லாருக்கும்
    எல்லாப்பொருளும் இங்கே, பயத்தில்-கள்ளப்பதுக்கள்
    சொல்லமுடியவில்லை பதில் நண்பனின்
    வெல்லும் சொல் இன்மை யறிந்து
    
    முண்டியடித்து ஏறுதல், இடம்கிடைக்காதோ பயத்தில்
    துண்டை போட்டு பதிவுசெய்தல் இங்கே – உண்டு
    சொல்லமுடியவில்லை பதில் நண்பனின்
    வெல்லும் சொல் இன்மையறிந்து
    
    முதியவர்க்கு பாதுகாப்பு, புதியவர்க்கு வழிகாட்டல்
    கதியற்ற அப்பாவிகளுக்கு அரவணப்பு – எதிலும்
    சொல்லமுடியவில்லை பதில் நண்பனின்
    வெல்லும் சொல் இன்மையறிந்து
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai