சுடச்சுட

  
  சபைச் பேச்சானாலும் அவை
  பேச்சானாலும் சுவையான
  பேச்சானாலும் வெல்லும் 
  சொல்லாக இருப்பது உயர்வு
  
  காண்பவரை  கேட்பவரை
  ரசிப்பவரை வெல்லும் 
  சொல்லால் ஈர்த்து ஆட்
  கொள்வதே திறமை புலமை
  
  ரத்னச் சுருக்கமாய் பேசி
  வார்த்தை விளையாட்டால்
  மடக்கி இன்முகம்  காட்ட
  வெல்லும் சொல் பிரதானம்
  
  கோழையை வீரனாக, வீரன்
  கோழையாக மையப்படுத்த
  படுவதும் வெல்லும் சொல்
  இடம் மாறி ஒலிப்பதாலே
  
  வெற்றியின் ரகசியம்
  பல்சுவை பேச்சின் நயம்
  தன் பக்கம் ஈர்த்து வெற்றி
  ஈட்டிடும் வெல்லும் சொல்
  
  அறிமுகம் தந்திடும் விலை
  இல்லா விளம்பரம் தந்திடும்
  சமுதாயத்தில் தூக்கி 
  நிறுத்திடும் வெல்லும் சொல்
  
  அகத்தின் அழகு முகத்தின்
  ஜொலிப்பு உணர்வின் துடிப்பு
  பார்வையின் ஈர்ப்பு எல்லாம்
  வெல்லும் சொல்லின் மகிமை
  
  சாதிக்க போதிக்க வழிகாட்ட
  பின் தொடர முன்செல்ல
  வெல்லும் சொல்லே முதல்
  படி வெற்றிப்படி பொக்கிஷம்
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai