சுடச்சுட

  

  சிந்தை சிறப்புடன் செயல்பட்டால்
  சிந்தும் சொல்  யாவும்  வெல்லும் சொல்லே!
  சிந்தையை சினம் நிறைத்தால்
  சிதறும் சொல்யாவும்கொல்லும்சொல்லே!

  அறம் எனப்படுவது எதுவென்றால்
  மறந்தும்பயனிலசொல்லாதிருப்பது! 
  திறன்அறிந்துசொல்லும்சொல்தான்
  பிறர் விரும்பிக்கேட்க வைக்குமே!

  கல்லால் அடித்த காயம் ஆறுமே!
  சொல்லால் அடித்தாலது ஆறாத ரணமே!
  வில்லிலிருந்து வரும் அம்பு    தைக்கும்!
  சொல்லின்வேகமோமனதைதாக்கும்! 

  சொல்லக்  கருதியதை சொல்லியே இங்கு
  வெல்ல நினைப்பவர் பலர் உண்டு!
  தலைவன்சொல்லே வேதவாக்கென
  கொலையும் செய்யும் தொண்டன் உண்டு! 

  மாசற்ற மனதுடன்உதிர்க்கும்சொல்
  மலையையும் பெயர்த்த மாயம் உண்டு! 
  நேசம் கொண்டு உரைக்கும்
  சொல்
  நானிலம் நலம் காண வைக்குமே! 

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai