Enable Javscript for better performance
வெல்லும்  சொல்: இராம இளங்கோவன்- Dinamani

சுடச்சுட

    
    வெல்லும் சொல்லை வாளாய் சுழற்றிக் 
    கொல்லும் சொல்லைக் கொன்று போடுவோம்; 
    இல்லை என்ற சொல்லை வாழ்வில் 
    இல்லா தாக்க எழுச்சிக் கொள்வோம்! 
    
    வலிமை யுள்ள வெல்லும் சொல்லால் 
    வையத் தலையெ  ழுத்தை மாற்றுவோம் ;
    வலிகள் நிறைந்த சொல்லை நீக்கி
    வாழ்வில் இன்ப வளத்தைப் கூட்டுவோம்! 
    
    அல்லும் பகலும் அயரா துழைப்போர் 
    அழுகையை மாற்ற வெல்லும் சொல்லால் 
    நல்லன  நாற்றாய்  நட்டு வைப்போம்;
    பொல்லாச் சொல்லைப் போட்டு புதைப்போம்! 
    
    நெல்லை விளைக்கும் வயலாய் நல்ல 
    வெல்லும் சொல்லை விளைய வைப்போம்;
    கல்லும் கனிந்து கனிச்சுவை யாக,
    கானலும் பருகிட கண்டு பிடிப்போம்! 
    
    தொல்லை யானத் துயரச் சொல்லை 
    அல்லவை விளைக்கும் ஆகாச் சொல்லை 
    எல்லாம் களைந்து எழுச்சி ஊட்டும் 
    வெல்லும் சொல்லை வாழ்வில் ஏற்போம்! 
    
    இல்லந் தோறும் உள்ளந் தோறும் 
    இத்தரை தோறும்  துறைகள் தோறும் 
    வெல்லத் தமிழின் வெல்லும் சொல்லை 
    மனிதம் விளைய விதைத்து வைப்போம்! 
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai