Enable Javscript for better performance
வெல்லும் சொல்:அழகூர். அருண். ஞானசேகரன்- Dinamani

சுடச்சுட

    
    வெல்லும்சொல் பலவுண்டு, விவேகமும் அதிலொன்று;
    நல்விதமாய் இன்னதனை நாமுணர்ந்து--வல்லமையை
    மூலதனம் என்றாக்கி முன்னேற்றந் தனைகாண்போம்;
    சீலம்மிக்க வாழ்வுக்கே சிறப்பு!
    
    வெல்லும்சொல் இன்னதெனும் விளக்கமதைக் கொண்டிட்டு
    அல்லும் பகலுமே அயராமல்--நல்வழியில்
    பாடுபட்டு உழைப்போர்க்கு பலன்கிட்டா திருந்திடுமோ?
    கேடுவரக் காண்பதெங் கே?
    
    நன்றான செயல்புரிய நாள்பார்க்கத் தேவையில்லை;
    உன்னதநல் வெற்றியே உனதாகும்,--என்றென்றும்,
    நல்லவர்க்கு எந்தவொரு நாளுமே நன்னாளாம்;
    வெல்லும்சொல் இன்னதென விளம்பு!
    
    வில்கொண்டு போராடி வெற்றிதனைக் காண்பதினும்
    சொல்கொண்டு போராடி சுமூகமாய்--நல்லதொரு,
    தீர்வுதனைக் காண்பதன்றோ தீர்கமுற்ற செயலாகும்?
    கூர்மதியர் செயலென்றே கூறு!
    
    மெய்யானத் திறனின்றி மேதினியை ஆளவந்த
    பொய்யனாம் மோடிதனைப் போற்றுவரோ?--செய்வேனென
    சொல்வதனை முடிக்கத்தான் சூரனென்பார் மக்களெலாம்;
    வெல்லும்சொல் உண்டாமோ வேறு?
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai