சுடச்சுட

    
    எங்கு விதைக்க வேண்டுமோ
    இடத்தேர்வு அத்தியாவசியம் !
    நீர்-நிலம்-காற்று
    கணக்கிடல் அவசியம்!
    காலமறிந்து விதைக்க வேண்டும் -
    தேவையில்லாதவற்றை ‘களை’த்திடல் வேண்டும் !
    எல்லா உயிருக்குமானதே ‘பயிர் தொழில்’
    உயர் எண்ணம் உள்ளத்தில் வேண்டும்!
    விளைச்சலை பாதுகாத்திடல் வேண்டும்-
    களத்தையும் கவனித்தல் முக்கியம்!
    ‘பொதுவுடைமை’ சிந்தாது பங்கிடல் வேண்டும்!
    நெல்லும் சொல்லும் ஒன்றே!!
    எல்லா நெல்லும் விதைநெல் ஆகாது !?
    எல்லா சொல்லும் வெல்லும் சொல் ஆகாது!?
    விளைச்சல் தருவது நெல் -
    தலைமுறைதாண்டிவிளைச்சல் தரும் வீரியமானது விதைநெல்!!
    விளைவு எதனையும் தராவிடில் அது வெறும் சொல்!
    விளைவு தரும் சொல்லே வெல்லும் சொல்!!
    விளைவெல்லாம் நல் விளைச்சலாகட்டும் !
    சொல் எல்லாம் வெல்லும் சொல்லாகட்டும்!
    
    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai