சுடச்சுட

  
  தேடிச் சேர்த்த பணமெல்லாம்.. இறுதியில் நம்முடன் வந்திடுதா…?
  ஆடி அடங்கும் வாழ்க்கையிலே.. ஆணவம் கொள்வது சரிதானா…?
  ​பட்டம் பதவி புகழெல்லாம்.. பாரினில் என்றும் நிலைத்திடுதா…?
  சட்டங்கள் எல்லாம் இங்கிருந்தும்.. குற்றங்கள் ஏதேனும் குறைந்திடுதா…? 
  
  கூடி ஒன்றாய் வாழ்ந்திடுவோம்.. கூட்டுணர்வை வளர்த்திடுவோம்…!
  ஓடிச் சென்று உதவிடுவோம்.. ஒற்றுமை உணர்வால் ஓங்கிடுவோம்…!
  இன்முகத்தோடு இருந்திடுவோம்.. இனிக்கும் சொல்லே பேசிடுவோம்…!
  இதயத்தில் சுரக்கும் அன்பினையே.. எங்கும் பரவச் செய்திடுவோம்…!
  
  ஆட்டிப்படைக்கும் அதிகாரம்.. அடங்கிப்போகும் ஒரு காலம்…!
  அன்பெனும் சொல்லே அவணியிலே.. நிலைத்திருக்கும் பல காலம்…!
  அன்பெனும் அணையா விளக்கினையே.. அகிலத்தில் எங்கும் ஏற்றிடுவோம்…!
  அன்பெனும் மந்திரச் சொல்லொன்றே.. அகிலத்தை வெல்லுஞ்சொல் கேளீர்…!!!
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai