Enable Javscript for better performance
வெல்லும் சொல்: உஷா முத்துராமன்- Dinamani

சுடச்சுட

    
    வெற்றிப் பாதைக்கு 
    செல்ல 
    தள்ளும்  அனைத்து  சொல்லும்
    வெல்லும் சொல்தான்!
    தோல்வி வந்தால் 
    கொல்லும் மனவேதனைக்கு 
    உற்சாகம் தரும்
    ஆதரவான சொற்கள்தான் 
    வெல்லும் சொல்!
    தேர்வில்  வெற்றி பெற 
    போர் செய்து  முளையினை
    கசக்குவதைவிட  
    தாய்தந்தையின்  ஆசியுடனும்
    அமைதியுடனும் கவனமாக 
     பாடம் படித்தால் 
    அதுவே......வெல்லும் சொல்!
    அவமானமே  வந்தாலும் 
    அமைதியாக  இருந்து 
    எதையும் எதிர்நோக்கினால் 
    அதுவே........
    வெல்லும்  சொல்!
    வாழ்க்கையில்
    உழைப்பு......உழைப்பு.......
    என்ற சொல்லே.....
    வெல்லும்  சொல்! 
    உறுதியுடன் உழைப்போம் 
    வெல்லும்  சொல்  என்ற  
    கனியின்  சுவையினை  உணர்வோம்!
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai