சுடச்சுட

    
    வெல்லும் சொல்லென்று உலகில் வேண்டுமோ
    உண்மை உழைப்பாளிக்கு என்றும் இங்கே
    உறக்கம் துறந்தே இன்றும் என்றும்
    ஊருக்கு உழைப்பதே உயரிய சொல்லாகும்……
    
    வாழ்க்கையில் இல்லை என்ற சொல்லையே
    தொல்லை எனவே கருதிடும் நிலையை
    என்றும் உணர்ந்திடும் உயரிய பண்பை
    உலகுக்கு காட்டுவதே உயரிய சொல்லாகும்……
    
    உதவிக்கு ஏங்கிடும் ஏழைகள் பலரும்
    உலவிடும் உலகமதில் உலாவும் வருகிறோம்
    உண்மையாய்த் தேவைப் படுவோர்க்கே நாமும்
    உதவிடும் மனம்தான் உயரிய சொல்லாகும்…….
    
    கல்லாமை என்னும் இருளை நாட்டில்
    இல்லாமை ஆக்கிடும் வகையில் நாமும்
    செய்திடும் பயணமும் ஆற்றிடும் செயலும்
    சொல்லிடும் என்றும் உயரிய சொல்லாய்…….
    
    நாளைய உலகின் நாயகன் நாமென்று
    நாளும் உணர்ந்தே செயலாற்றி வந்தால்
    நல்லதோர் உலகமதை உருவாக்கும் சிற்பியாவோம்
    என்னும் சிந்தனையே உயரிய சொல்லாகும்
    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai