சுடச்சுட

  
  காந்தியும்தான் உண்மை ஒன்றே பேசி
  ​கருத்துகளில் வெல்லும் சொல் கண்டார்!
  சாந்திநிலவ வேண்டு மென்றால் அன்பு
  சமத்துவம் வழியில் நடப்போம் என்றார்
  
  தேன்தமிழில் வள்ளுவர்தான் அழக ழகாய்
  தூயமான வெல்லும்சொல் எழுதி வைத்தார்
  தமிழ்த்திருநாட்டின் அவ்வையாரும் தான்
  தனித்தமிழில் வெல்லும் சொல் பலகண்டார்
  
  கல்விபயிலும் பிள்ளை களிடம் அன்பாய்
  கருத்தினை புகுத்தும்வழி எது வென்றால்
  நல்லநல்ல வெல்லும் சொல் பேச வேண்டும்
  நன்மைதரும் இனிதான சொற்கள் கொண்டு
  வெல்லம்போல அறிவுரைகள் தந்து விட்டால்
  
  வெற்றிதான் சூடிடுவார் அவர்கள் தானே
  அல்லவை அகற்றி இனிதாய் வாழ்ந்திட
  அறச்சொற்கள் தனை தவிர்த்தல் வேண்டும்
  
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai