சுடச்சுட

    

    வெல்லும் சொல்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி

    By கவிதைமணி  |   Published on : 11th June 2018 02:50 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கால் பதிக்கும் இடமெல்லாம்
    கோலோச்சும் தடமாக மாற்றும்
    “ உழைப்பா?”

    உலக உயிரினங்களின்
    உள்ளங்களை உள்ளிழுக்கும்
    சொல் ஒன்று! “ உண்மையா? ”
    வாழ்க்கை வாகனத்தை
    மென்மையாய் நகர்த்தும்
    எரிபொருள் ஒழுக்கம் – அதுவா ?
    சுற்றி இருக்கும் மனங்களை
    சுட்டி இழுக்கும்
    வெற்றிச்சொல்

    “தானமா? நிதானமா ?”
    பஞ்சிலிருந்து இல்லை
    நஞ்சிலிருந்தும்
    நூல் உருவாக்கும்
    “நெஞ்சுரமா ?”

    ஜெகத்தையே ஜெயிக்கும்
    தனிச்சொல் “திறமையா”?
    செல்வம் நோக்கும்
    மாறுகண் வேண்டாம் –
    “கடமையும் கல்வியும்”
    ஒரே பார்வையாய் வெல்லுமோ ?
    வங்கிகளில் வேண்டாம் -
    உறவுகளில், உணர்வுகளில்
    ஒரு தன்னலமற்ற முதலீடு !
    இந்த பொதுநலச்சொல்லா ?
    இப்படி- இப்படிதான்
    சிந்தனையை அலையவிட்டிருந்தேன்--  
    வெல்லாத சொல்
    இல்லாத மொழி,
    தமிழ் எனப்புரிந்தது !

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai