சுடச்சுட

  
  உள்ளத்தின் சிந்தனைகள் மலரே என்றால்
    உதவிகளாய் இதழ்விரிக்கும் மணமே தந்து
  பள்ளத்தில் வீழுகின்ற நீரென் றானால்
    பயன்தருமே வளர்பயிராய் அன்பே என்றும்
  தள்ளாது, நில்லாது எவர்க்கும் எங்கும்
    தன்னார்வத் தொண்டென்றால் உலகம் போற்றும்
  கொள்ளாத துன்பங்கள் கொடுமை நீங்க
    குளிர்கின்ற நிலைதந்தால் “வெல்லும் சொல்லே”
  
  நிறைவான நேசத்தில் வலிமை கூடும்
    நில்லாது பகையெல்லாம் எங்கோ ஓடும்
  குறைவில்லா உயர்வாழ்வு எல்லாம் வந்து
    குணமெல்லாம் அறமென்றே நிறையும் நீதி
  திரைநீங்க ஒளிர்கின்ற கலைகள் போலே
    திறமெல்லாம் இசைந்திருந்து கீதம் பாடும்
  முறைகண்டே முனைவோர்க்கு முடியும் எல்லாம்
    முன்வந்து மறைபோற்ற “வெல்லும் சொல்லே”
  
  எப்போதும் நல்வழியே மனதில் தோன்ற
    இகழ்வெல்லாம் புகழாகி ஏற்றம் ஆகும்
  இப்போதே செய்திடுவேன் என்றோர் வேகம்
    இருக்கின்ற உயர்நிலையை வீழ்த்தும் கீழே
  செப்புகின்ற மனச்சான்று உண்மை ஆகும்
    செய்யாது விட்டுவிட்டால் வீணாய்ப் போகும்
  தப்பாது இனியென்றும் வாய்மை கொள்ள
    தவறாது அறம்சூழ்ந்து “வெல்லும் சொல்லே”
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai