சுடச்சுட

    
    ஆசையே துன்பத்திற்கு காரணம்’
    ஆசைக்கு அணை போட்ட
    அன்பான புத்தர் வாக்கு
    அர்த்தம் உள்ள சொல்வாக்கு !
    
    ‘ஒரு கன்னத்தில் அறைந்தால்
    மறு கன்னத்தை திருப்பிக் காட்டு ‘
    ஏசுநாதரின் சொல்வாக்கு
    மாசுபட சினம் கொள்பவரை
    பசுபோல் பணியச் செய்துவிடும் !
    
    சத்திய வாக்கை தவறாமல்
    கடைபிடித்து வாழ்ந்த
    அரிச்சந்திரன் வரலாறு
    அன்று கண்ட காந்தியை
    இன்று சத்தியசோதனை
    எழுத வைத்து
    வாழ்வில் மகாத்மாவாக்கியது !
    
    வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம்
    வாடிய வள்ளலார்
    வடித்த சொற்கள்– இன்று
    உலக மக்களிடையே 
    உயிர் இரக்கம் வளர்த்தது !
    
    அடித்தாலும் உதைத்தாலும்
    பள்ளிக்குச் செல்லாத பிள்ளை
    படித்தால் வாழ்வில்
    கொடிபோல் உயரலாம் 
    அன்னையின் சொற்கள்
    பள்ளிக்கு செல்ல வைத்தது !
    
    எமனிடம்
    ‘என் கணவன் இல்லாமல்
    குழந்தை வரம் பலிக்குமா?!’
    கேட்ட சத்யவான்சாவித்திரி
    கேள்விக் கணையே
    சத்யவான் உயிரைமீட்கும்
    வெல்லும் சொல்லானது !
    
    கல்லும் கசிந்துருக
    கள்ளமில்லாப் பிள்ளைபோல்
    சொல்லும் செயலுமிருந்தால்
    வாழ்வில் உனக்கு
    வெல்லும் இனிய சொல் !
    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai