சுடச்சுட

  
  ஊட்டி விடும் தேனமுது குழந்தைக்கு இனிக்கும்
  காட்டி விடும் பாச அன்பு சொற்களில் குளிக்கும்
  ஈட்டியென பாயும் சொற்கள் மனதைக் கிழிக்கும்
  மீட்டிடும் இசையென வழியும் சொற்கள் சுகிக்கும்
  
  இன்சொல் தீயவனையும் மயக்கித் திருத்திடும்
  வன்சொல் நல்லவனையும் நாயாக்கி வருத்திடும்
  புன்னகையின் சொற்கள் மனிதனாய் நிறுத்திடும்
  இன்னலிலும் இனிக்கும் சொற்கள் தேற்றிவிடும்
  
  தகுதியான தரமிக்கவரைப் புகழும் சொற்கள்
  மிகுதியான ஆணவச் செருக்கழிக்கும் சொற்கள்
  பகுந்துண்ணும் புரவலர் புழங்கிடும் சொற்கள்
  வெகுமதி தந்து ஊக்கிடும் ஊக்கச் சொற்கள்
  
  இனிய சொற்களே அன்பின் இலக்கணம் உலகில்
  கனியென இனித்து கயவரையும் கவர்ந்திடுமது
  பனியெனத் துன்பங்களை நீராக்கிப் போக்கிடும்
  தனித்துவ இனிமைச் சொற்கள் வென்றிடுபவையே
  
  ஊக்கம் தரும் சொல்லெல்லாம் வெல்பவையே
  ஆக்கம் தரும் சொற்களும் ஊக்கம் தருபவையே
  நீக்கிடுவோம் வன் சொற்களை நாவை விட்டே
  தேக்கிடுவோம் இனிய சொற்களின் வெற்றியையே
  
  பற்களில் வெண்மை அழகூட்டும் முகத்திற்கே
  கற்களில் பளிங்கு மெருகூட்டும் கட்டிடத்திற்கே
  புற்களின் பசுமை குளிர்ச்சி தரும் பசுந்தரைக்கே
  சொற்களின் இனிமை வென்றிடும் உலகையே.
  
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai